Translate

Showing posts with label college life. Show all posts
Showing posts with label college life. Show all posts

Sunday, 20 July 2014

கல்லூரி தாய்


நான்கு வருடம் நம்மை சுமந்த இந்த கல்லூரி தாய்க்கும் நமக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி இன்று அறுந்தது...!

நம்மை சிறந்த மனிதர்களாக வலிமை மிக்கவர்களாக வெளி வாழ்வுக்கு ஏற்ப பாடம் கற்றுக்கொடுத்து இப்போது நம்மை ஈன்றெடுத்த இந்த நொடியில் அழுகையுடன் அவளை விட்டு வெளியேறுகிறோம்...!

எனது உலகமாய் நான் எண்ணிய இந்த கல்லூரியை என் மரணத்திலும் மறக்க முடியாது
சிறந்த நண்பர்கள்,உறவை போன்ற உயிர்கள், குடும்பத்தை போல பாசம் என அனைத்தும் நிறைந்து இருக்கிறது இந்த கல்லூரியில்...!

நாம் கற்றது படிப்பு பாடம் மட்டும் அல்ல வாழ்க்கை பாடமும் தான்...!

வேண்டாம் வேண்டாம் என்று ஆயிரம் முறை சொன்னாலும் இந்த கல்லுரி வாழ்க்கையோ இப்போது முடிவிற்கு வந்து விட்டது...!

இந்த கல்லூரியை விட்டு விடை பெற்றாலும் என் குடும்பமாகிய நண்பர்களிடம் இருந்து என் மரணம் அப்போது தான் நான் விடை பெறுவேன்....!!!!

Saturday, 1 March 2014

:: நம் கல்லூரி கால நட்பு ::

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்
என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!

முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி
முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!

என் முகம் வாடிக்கிடக்க,
நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!

தினம் தினம் நமது கால்கள்
ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே
இன்பம், துன்பம் அனைத்தையும்
பகிர்ந்தபடியே மெல்ல சென்றது
கல்லூரி கால நாட்கள்...!

இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும்
நம் நட்புக்கு முடிவு
என்பதே இல்லை என்றும்...!

தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!!