Translate

Showing posts with label kadhal kavithai. Show all posts
Showing posts with label kadhal kavithai. Show all posts

Thursday, 9 May 2013

இருந்திடுவோம் நாம் ஒன்றாக



அன்பே உன் பார்வையில் கொள்கிறாயே..!

நீ பேசிய வார்த்தைகள் என்னை சுற்றியே சூல்கின்றது..!

உன்னை வந்து சேரவே துடிக்கிறேன்..!

உன் விரல் பிடிக்கவே காத்திருக்கிறேன்..!

விழியோரம் விழி பேச
இதழோரம் இதழ் பேச
இதய துடிப்பு ஒன்றாக
இருந்திடுவோம் நாம் ஒன்றாக...!!!

Friday, 26 April 2013

கொல்கிறாயே..!

கொல்லாமல் கொல்கிறாயே அன்பே..:(

உன் மீது அதிகம் அன்பு வைத்தது தவறா??
உன் அன்பை எதிர் பார்த்தது தவறா ??

ஒரு நாள் சந்தோசத்தை மட்டும் தருகிறாய் மறுநாள் கொன்று விடும் அளவு வலியை தந்து விடுகிறாயே..!

உன்னுடன் வாழ நினைக்கும் எந்தன் எண்ணம் கனவாய் மாறிற்றே..!! .

விரும்பிய உன்னை வெறுக்கவும் முடியவில்லை..:(

என் உயிரைவிட அதிகம் உன்னை நேசிக்கிறேன் ஏன் உனக்கு புரியவில்லை..

இனி என் செய்வேன் என் மரணம் தான் புரிய வைக்கும் உனக்கு என் காதலை...



ஆசை

உன் கையோடு என் கை கோர்த்து  தனிமையில்    நடந்திட ஆசை...!

உன் தோளில் தலை சாய்த்து 
உறங்கிட ஆசை...!

நீ அறியா நேரத்தில் உன் கன்னத்தில்
முத்தமிட ஆசை...! 

உன் வாசம் என் வாசமாய்  
மாறிட ஆசை...!

உன்னையே நினைத்து
உருகிட ஆசை...!

உன் மார்பில் தலை சாய்த்து உன் இதய துடிப்பை  அறிந்திட ஆசை...!

நீ என் மடியில் உறங்கும் போது உன் தலை   கோதிட ஆசை...!

ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்து நாம்   வெளியே சென்றிட ஆசை...!

உன் சுவைக்கேற்ப சமைத்து அதை உனக்கு  உட்டிட ஆசை...!

உன்னை போன்ற ஒருவனை நம் பிள்ளையாய்     பெற்றிட ஆசை...!

உன் சரி பாதியாய் இறுதி வரை
இருந்திட ஆசை...!

கடைசி ஆசை உன் மடியிலே என்
உயிரை விட்டுவிட ...!!!