Translate

Showing posts with label Kavithai. Show all posts
Showing posts with label Kavithai. Show all posts

Saturday, 1 March 2014

:: நம் கல்லூரி கால நட்பு ::

எனக்கென்று நண்பர்கள் கிடைப்பார்கள்
என்ற கனவுடன் நுழைந்தேன்
கல்லூரிக்குள்...!

முதல் நாள் இங்கே உட்காரு என்று சொல்லி
முதல் நட்பு கிடைக்க, நாளடைவில்
எனக்கில்லா நண்பர் கூட்டம் இல்லை
இந்த கல்லுரியில்...!

நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்
என்று எங்கோ கஷ்டப்படும் நண்பனின்
கவலையைப் போக்க போராடியும்,
என் நண்பன் வீட்டு விசேசங்களுக்கு சென்று
அவர்களின் வீட்டுப் பிள்ளைதான் நாங்களும்
என்று கவனித்த அவர்களின் பாசத்தையும்
இன்றும் எங்களது நெஞ்சம் மறக்கவில்லை...!

என் முகம் வாடிக்கிடக்க,
நான் இருக்கிறேன் உனக்காக
என்ற குரல் ஒன்று போதும்
என் முகம் மலர...!

தினம் தினம் நமது கால்கள்
ஒன்றின்பின் ஒன்றாக நடக்கவே
இன்பம், துன்பம் அனைத்தையும்
பகிர்ந்தபடியே மெல்ல சென்றது
கல்லூரி கால நாட்கள்...!

இன்று கல்லூரி படிப்பு முடிந்தாலும்
நம் நட்புக்கு முடிவு
என்பதே இல்லை என்றும்...!

தொடரட்டும் நம் நட்பு என்றென்றும்...!!!

Sunday, 2 February 2014

அழகு..!

அவள் கொண்ட முகமழகு
அதைவிட
நான் கண்ட அகமழகு!

வெட்டாமல் வளர்ந்து விட்ட நகமழகு
அதைவிட
பெண்களுக்குள் அவளின் தனி ரகமழகு!

வெகுளியா பேசுகின்ற மொழியழகு
அதைவிட
விவரத்தை வெட்கத்தில் புதைத்தாலும் கசிந்துவிடும் விழியழகு!

விரல் கோர்த்து நடக்கும் போது வழியழகு
அதைவிட
விரல்மட்டும் தொட்டதனால் அத்தனையும் என்மேல் போட்டுவிடும் பழியழகு!

அவளோடு இருக்கின்ற இனிமையழகு
அதைவிட
அவள் நினைவுகளில் கழிக்கின்ற என் தனிமையழகு!

என்னாலே மலருகின்ற சிரிப்பழகு
அதைவிட
நான் பார்க்குமுன்னே துடைக்கின்ற கண்ணீரழகு!

ஆகாயமழகு பூமியுமழகு
அதைவிட
அவளோடிருக்கையிலே அமாவாசை நிலவும் அப்படியோர் பேரழகு!

காரணமில்லாமல் எனை திட்டிக்கொள்வதழகு
அதைவிட
காரியம் முடிந்தபின் எனை கட்டிக்கொள்வதழகு!

Thursday, 28 November 2013

என்றும் உன்னுடன் இருப்பேன்



நமக்குள் ஆயிரம் சண்டைகள் வந்தாலும் மனம் உன்னை விட்டு பிரிய மறுக்கிறது..!

எத்தனை முறை சண்டைகள் வந்தாலும் இறுதியில் நமக்குள் இருக்கும் அன்பு அதிகமாய் தான் வெளிப்படுகிறது..!

உன் தோள் சாய்ந்து என்றும் உன்னுடன் இருப்பேன்..!

உனக்காக நான்



உன் ஒவ்வொரு பயணத்திலும் நான் உன்னுடன் இருக்கவே ஆசை படுகிறேன்...

உன்னை மட்டும் நம்பி உன்னையே எதிர் பார்த்து உன் அருகில் உன்னை சுற்றி வளம் வருவேன்...

நீ போகும் பாதை கடினமாய் இருந்தாலும் உன்னுடன் என் பாதங்களும் அடி எடுத்து வைக்கும்...

உன் விரல் பிடித்து நடக்க இடையில் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் கவலை கொள்ளாமல் உன் பின்னால் வருவேன்...

Thursday, 9 May 2013

இருந்திடுவோம் நாம் ஒன்றாக



அன்பே உன் பார்வையில் கொள்கிறாயே..!

நீ பேசிய வார்த்தைகள் என்னை சுற்றியே சூல்கின்றது..!

உன்னை வந்து சேரவே துடிக்கிறேன்..!

உன் விரல் பிடிக்கவே காத்திருக்கிறேன்..!

விழியோரம் விழி பேச
இதழோரம் இதழ் பேச
இதய துடிப்பு ஒன்றாக
இருந்திடுவோம் நாம் ஒன்றாக...!!!

Friday, 26 April 2013

நிறைவேறியது

என் கனவு நிறைவேறியது ...!

உன்னிடம் நான் வெளிபடுத்தின யாவும் நான் உன் மீது வைத்த அதிக படியான அன்பால் தான்...!

உன்னிடம் இருந்து எதிர் பார்த்த அனைத்தும் அதனால் தான்...!

ஆனால் இறுதியில் அடைந்தது என்னவோ ஏமாற்றம் தான்...!

காலம் கடக்க கடக்க என்னுள் மாற்றத்தை உணர்ந்தேன்...!

எதிர் பார்க்காத நேரத்தில் என்னை தேடி வந்து உன் அதிகப்படியான அன்பை தருகிறாய்....!

நான் எதிர் பார்த்ததை இப்போது நிறைவேற்றுகிராயே...:)



கொல்கிறாயே..!

கொல்லாமல் கொல்கிறாயே அன்பே..:(

உன் மீது அதிகம் அன்பு வைத்தது தவறா??
உன் அன்பை எதிர் பார்த்தது தவறா ??

ஒரு நாள் சந்தோசத்தை மட்டும் தருகிறாய் மறுநாள் கொன்று விடும் அளவு வலியை தந்து விடுகிறாயே..!

உன்னுடன் வாழ நினைக்கும் எந்தன் எண்ணம் கனவாய் மாறிற்றே..!! .

விரும்பிய உன்னை வெறுக்கவும் முடியவில்லை..:(

என் உயிரைவிட அதிகம் உன்னை நேசிக்கிறேன் ஏன் உனக்கு புரியவில்லை..

இனி என் செய்வேன் என் மரணம் தான் புரிய வைக்கும் உனக்கு என் காதலை...