”பட்டாம்பூச்சி”.
ஒரு தோட்டத்துல இரண்டு பட்டாம்பூச்சிகள் ஜாலியா சுத்திக்கிட்டு
இருந்தது.அந்த இரண்டு பட்டாம்பூச்சிக்குள்ள யார் அதிகமா நேசிக்கிறோம்னு ஒரு
சண்டை வந்தது.ஆண் பட்டாம்பூச்சி சொன்னது நான் தான் உன்னை அதிகமா
நேசிக்கிறேன்னு,பெண் பட்டாம்பூச்சி சொன்னது இல்லை நான் தான் உன் மேல்
உயிரையே வச்சி இருக்கேன்னு.
ஆண் பட்டாம்பூச்சி சொன்னது நமக்குள்ள
ஒரு போட்டி வச்சிக்குவோம்,நாளை காலை யார் முதல்ல இந்த பூவுல வந்து
உட்காருராங்களோ அவங்கதான் அதிகமா அன்பு வச்சியிருக்காங்கன்னு
தெரிஞ்சிக்குவோம் என்றது.பெண் பட்டாம்பூச்சியும் இந்த போட்டிக்கு
ஒப்புக்கொண்டது.
அடுத்த நாள்
காலையில ஆண் பட்டாம்பூச்சி சீக்கிரமாக அந்த பூ இருக்கிற இடத்துக்கு
சென்றது.அந்த பூ விரியும் வரை காத்துக்கிட்டு இருந்தது.
பெண்
பட்டாம்பூச்சி தன் உன்மை காதலை நிரூபிக்க இரவே அந்த பூவுக்குள் அமர்ந்து
இருந்திருக்கிறது.காலை விடிந்தவுடன் ஆண் பட்டாம்பூச்சியிடம் பறந்து சென்று
அதன் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தது.
சிறிது நேரத்தில் அந்த பூ விரிய ஆரம்பித்தது .அந்த பூவை பார்த்த ஆண் பட்டாம்பூச்சி அதிர்ச்சியில் உறைந்து போனது.
இரவு முழுவதும் அந்த பூ மூடி இருந்ததால் பெண் பட்டாம்பூச்சி பூவுக்குள் இறந்து கிடந்தது.
No comments:
Post a Comment