Translate

Thursday, 11 April 2013

"பழுத்த காதல்”

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.

நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன்.ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.

ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன்.ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது.என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.

கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா...என்று கேட்டேன்.

நியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.

”என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்.”

அவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது.இது தான் உன்மையன பாசம் .சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

“காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை"

No comments:

Post a Comment