Translate

Sunday, 28 April 2013

True love

If someone loves you a lot, 
If someone cares you always, ♥ 
If someone keeps you happy 
always, 
then 
you should also have to hear his/ 
her pain and problems which is 
not expressible.......
Its happen only in true love ♥ ♥

Friday, 26 April 2013

நிறைவேறியது

என் கனவு நிறைவேறியது ...!

உன்னிடம் நான் வெளிபடுத்தின யாவும் நான் உன் மீது வைத்த அதிக படியான அன்பால் தான்...!

உன்னிடம் இருந்து எதிர் பார்த்த அனைத்தும் அதனால் தான்...!

ஆனால் இறுதியில் அடைந்தது என்னவோ ஏமாற்றம் தான்...!

காலம் கடக்க கடக்க என்னுள் மாற்றத்தை உணர்ந்தேன்...!

எதிர் பார்க்காத நேரத்தில் என்னை தேடி வந்து உன் அதிகப்படியான அன்பை தருகிறாய்....!

நான் எதிர் பார்த்ததை இப்போது நிறைவேற்றுகிராயே...:)



கொல்கிறாயே..!

கொல்லாமல் கொல்கிறாயே அன்பே..:(

உன் மீது அதிகம் அன்பு வைத்தது தவறா??
உன் அன்பை எதிர் பார்த்தது தவறா ??

ஒரு நாள் சந்தோசத்தை மட்டும் தருகிறாய் மறுநாள் கொன்று விடும் அளவு வலியை தந்து விடுகிறாயே..!

உன்னுடன் வாழ நினைக்கும் எந்தன் எண்ணம் கனவாய் மாறிற்றே..!! .

விரும்பிய உன்னை வெறுக்கவும் முடியவில்லை..:(

என் உயிரைவிட அதிகம் உன்னை நேசிக்கிறேன் ஏன் உனக்கு புரியவில்லை..

இனி என் செய்வேன் என் மரணம் தான் புரிய வைக்கும் உனக்கு என் காதலை...



ஆசை

உன் கையோடு என் கை கோர்த்து  தனிமையில்    நடந்திட ஆசை...!

உன் தோளில் தலை சாய்த்து 
உறங்கிட ஆசை...!

நீ அறியா நேரத்தில் உன் கன்னத்தில்
முத்தமிட ஆசை...! 

உன் வாசம் என் வாசமாய்  
மாறிட ஆசை...!

உன்னையே நினைத்து
உருகிட ஆசை...!

உன் மார்பில் தலை சாய்த்து உன் இதய துடிப்பை  அறிந்திட ஆசை...!

நீ என் மடியில் உறங்கும் போது உன் தலை   கோதிட ஆசை...!

ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்து நாம்   வெளியே சென்றிட ஆசை...!

உன் சுவைக்கேற்ப சமைத்து அதை உனக்கு  உட்டிட ஆசை...!

உன்னை போன்ற ஒருவனை நம் பிள்ளையாய்     பெற்றிட ஆசை...!

உன் சரி பாதியாய் இறுதி வரை
இருந்திட ஆசை...!

கடைசி ஆசை உன் மடியிலே என்
உயிரை விட்டுவிட ...!!! 

Sunday, 14 April 2013

வேண்டும்


வலி இல்லாத வாழ்க்கை வேண்டும்...!

பிரிவு இல்லாத உறவு வேண்டும்...!

ஆறுதலாய் அணைத்திட அன்பான கரங்கள் வேண்டும்...!

காயமே பட்டிடாத இதயம் வேண்டும்...!

எந்நிலையிலும் கலங்கிடாத கண்கள் வேண்டும்...!

உன்னை என்றும் எண்ணிடாத எண்ணம் வேண்டும் ...!

U will Love it

U will Love it...

Once there was an island where all
the feelings lived together.

One day there was a storm in the
sea and the island was about to
drown.

Every Feeling was scared but Love
made a boat to escape.

All the feelings jumped in the boat
except for one feeling.

Love got down to see who it was...
It was Ego!!

Love tried & tried but Ego didnt
move..

Everyone asked Love to leave Ego &
come in the boat but Love was
meant to Love....

It remained with Ego.

All other feelings were left alive but
Love died because of Ego !!

I m sorry

I m sorry I promised to not talk to
you but i still did
I m sorry for all those stupid
fights
I m sorry for hurting you
I m sorry for not always being
there
I m sorry for not caring enough
or caring to much that you get
annoyed
I m sorry that I love hearing
the sound of your voice
I m sorry that I cant be perfect
I m sorry that I wasn’t your all like
I used to be
I m sorry we didn’t last ‘forever &
ever like you once said we would
I m sorry that you broke my heart
I m sorry that now we lost what
we had
and you never seem to be happy
with me anymore
I m sorry your always on my mind
I m sorry i always dream of you
I m sorry for always smiling
because of you
But most of all
I'm sorry you had to end
things
I m not sorry for falling in love
with you
but
I'm sorry for you falling out of
love with me
Cause when I look back to this
day
your gonna be the one saying
sorry that you left
but now.......
I'm sorry that you lost me...</3

Thursday, 11 April 2013

"பழுத்த காதல்”

வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.

நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார்.என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன்.ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.

ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன்.ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது.என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.

கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா...என்று கேட்டேன்.

நியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.

”என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்.”

அவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது.இது தான் உன்மையன பாசம் .சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.

“காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை"

சிறிது நேரம் செலவிடுங்கள்

மகன் : அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?

தந்தை : கண்டிப்பா.. என்ன கேளு..?

மகன் : 1 மணி நேரத்திற்கு எவ்ளோ சம்பாரிப்பிங்க ?

தந்தை : அது உனக்கு தேவை இல்லாத விஷயம், நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?

மகன் : சும்மா தெரிஞ்சிக்கத்தான் சொல்லுப்பா

தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன்
மகன் : "ஓ (தலைகுனிந்தவாறே) அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"
தந்தைக்கு கோபம் வந்தது ...
தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு நான் இங்க உங்களுக்காக நாய்போல
உழைக்குறேன்..."

அந்த சின்னப்பையன் அமைதியா அவன்
படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டா¬ன் ..
அவன் தந்தை மகனின்
கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார். 1 மணிநேரம் சாந்தம் அடைந்து யோசித்தார் மகன் ஏன் இப்படி கேள்வி கேட்டானென்று ..
ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகனிடம் சென்றார் ..
தந்தை : "தூங்கிட்டியாடா ?"
மகன் : "இல்லப்பா,. முழிச்சிட்டுதான்
இருக்கேன் ..."
தந்தை : "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள்
பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ
கேட்ட 50 ரூபாய் .."
அந்த சிறுவன் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தான் ..

மகன் : "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த
பணத்தை எடுத்து தலையணை அடியில்
வைக்க போகும்
போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள்
இருந்தன ..
அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் ..
அந்த சிறுவன் மெதுவாக
பணத்தை எண்ணி சரிப்பார்தான் ...
பிறகு அவன் தந்தையை பார்த்தான் ...
தந்தை : "உனக்கு எதுக்கு இவ்வளவு பணம் ....
அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேத்து வச்சி இருக்குயே ..."
மகன் : "ஏன்னா தேவையான பணம் என்
கிட்ட இல்ல ...
இப்போ இருக்கு ....
கேளுங்கப்பா இப்போ என்கிட்டே 100 ரூபாய் இருக்கு ....

இதை நீங்களே வச்சிக்கோங்க இப்போனான் உங்களோட 1 மணிநேரத்தை வாங்கிக்கலாமா ? நாளைக்கு 1 மணிநேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்க நான் உங்ககூட சேர்ந்து இரவு உணவு சாப்பிட விரும்புறேன் ...

அந்த தந்தை உடைந்துபோய் விட்டார் சிறுவனின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...
தன் மகனிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்.. ♥ ♥

உங்களின் பாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உறவுகளுக்காக சிறிது நேரம் செலவிடுங்கள்....வேலை முக்கியம்தான் ஆனால் நாளை நிரந்திரம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...வாழ்க்கை வாழத்தான்...

Wednesday, 10 April 2013

LOVE QUOTES

A flower cannot blossom without sunshine, and man cannot live without love.

Love is composed of a single soul inhabiting two bodies.

Sometimes the heart sees what is invisible to the eye. 


Affection is responsible for nine-tenths of whatever solid and durable happiness there is in our lives. 

A man reserves his true and deepest love not for the species of woman in whose company he finds himself electrified and enkindled, but for that one in whose company he may feel tenderly drowsy. 


A kiss is a lovely trick designed by nature to stop speech when words become superfluous. 


Love is like a friendship caught on fire. In the beginning a flame, very pretty, often hot and fierce, but still only light and flickering. As love grows older, our hearts mature and our love becomes as coals, deep-burning and unquenchable. 

என்னை முற்றிலும் மாற்றியது நீ தான்..

என்னை முற்றிலும் மாற்றி விட்டாய் நீ .........!!!!!!!!!

அன்பை மட்டும் வெளிப்படித்தின என்னுள் ஏன்   உன் மீது அன்பான கோபத்தை வெளிப்படுத்த செய்தாய்  ???

பிரிவின் வலி தெரியாமல் இருந்த என்னுள் ஏன்   பிரிவின் வலியை உணர்த்தினாய்  ???

யாரையும் தேடாமல் இருந்த என் கண்களை ஏன்   உன்னை மட்டும் தேட வைத்தாய்  ???

தனிமையின் அவஸ்தை தெரியாத எனக்கு ஏன்   தனிமையின் அவஸ்தையை பரிசாக தந்தாய்  ???

யாரிடமும் எதிர் பார்க்காத அன்பை ஏன் உன் மீது எதிர் பார்க்க வைத்தாய்  ???

இப்போது சொல் நானா மாறி விட்டேன்  ...???

நீயே சொந்தக்காரன்



என் கவிதையில் எழுதப்படும் வார்த்தைக்கு சொந்தகாரியாய் நானாக இருக்கலாம் ஆனால் தோன்றும் வார்த்தைகள் உன் நினைவாலே என்பதால் என் கவிதைக்கு நீயே சொந்தக்காரன் ஆவாய்....!!!!

உன் விருப்பமே என் விருப்பம்




நீ என்னை விரும்புகிறாய் என்று நானும் என் அன்பை உன்மேல் விருப்பமாய் மாற்றினேன் ஆனால் உன் விருப்பம் என்னவோ என்மீது இல்லை என்று தெரிந்தவுடன் உன் விருப்பத்துக்கு இணங்க என் விருப்பதை உடைத்தெறிந்து விட்டேன் ஏன்னெனில் உன் விருப்பம் எதுவோ அதே தான் எனது விருப்பமும் என்று உனக்கு தெரியாதா..?

ஒரு தலை காதல்

எண்ணத்தில் கலந்து கனவாய் தோன்றுகிறாய்..!
 எந்தன் இதயத்தின் ஆசைகளை அதிகமாக்குகிறாய்...!
 உன் பாதையை பின்தொடரும் உன் நிழல் ஆனேன்...!
 என்னை என்ன செய்தாய் உன்னையே நினைவில் நிலையாய் கொண்டுள்ளேன்...!
 உன் சிரிப்பில் சுட்டெரிக்கிறாய் எனவோ நானும் இதமாய் வெந்துபோகிறேன்...!
 என் கண்களின் செல்ல பிள்ளை நீதானோ உன்னை மட்டும் தான் பார்க்க துடிக்கின்றது...!
 என் இதயத்துள் நுழைந்த உனக்கு ஏன் என் அருகில் வர தெரியவில்லை...!
 என் வாழ்வின் துணை என்றும் நீதான்...!

Saturday, 6 April 2013

உயிர் காக்கும் தந்திரம்:

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

Friday, 5 April 2013

Never Break Up With Someone You Really Love ♥

BOY--I broke up with her.
GIRL--He broke up with me.
BOY--I don't know why i did that.?
GIRL--It seems like he had a strong
reason for
doing it.
BOY--I was so happy with her.
GIRL--All I did was disappoint him.
BOY--I got a new girl which I don't
even like.
GIRL--He got a new girl which he's in
love with.
BOY--It's only because I couldn't get my
mind off
of her..
GIRL--He doesn't even think of me.
BOY--No one can replace her.
GIRL--He replaced me with that Girl.
BOY--She was so much better than my
new girl.
GIRL--She has everything i don't.
BOY--I want her back.
GIRL--He doesn't even want to hear my
name.
BOY--She's everything to me.
GIRL--I'm nothing to him.
BOY--But now she probably hates me.
GIRL--But i can never hate him..
BOY--I miss her.
GIRL--I miss him.
BOY--I love her.
GIRL--I love him..

The ultimate truth comes out in the end.♥♥♥

யானையின் அடக்கம்

 கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:

"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

Thursday, 4 April 2013

I Love You....

Every time You Hurt Me
But,
I Don't Get Angry With You.
Every time It Pains,
But,
I Don't Say A Word To You.
Every time You Say Sorry,
I Forgive You On The Spot.
Because
Every time You Make A Mistake,
I Punish Myself
That's How Much I Love You.... ♥ ♥ ♥

Wednesday, 3 April 2013

”பட்டாம்பூச்சி”.

ஒரு தோட்டத்துல இரண்டு பட்டாம்பூச்சிகள் ஜாலியா சுத்திக்கிட்டு இருந்தது.அந்த இரண்டு பட்டாம்பூச்சிக்குள்ள யார் அதிகமா நேசிக்கிறோம்னு ஒரு சண்டை வந்தது.ஆண் பட்டாம்பூச்சி சொன்னது நான் தான் உன்னை அதிகமா நேசிக்கிறேன்னு,பெண் பட்டாம்பூச்சி சொன்னது இல்லை நான் தான் உன் மேல் உயிரையே வச்சி இருக்கேன்னு.

ஆண் பட்டாம்பூச்சி சொன்னது நமக்குள்ள ஒரு போட்டி வச்சிக்குவோம்,நாளை காலை யார் முதல்ல இந்த பூவுல வந்து உட்காருராங்களோ அவங்கதான் அதிகமா அன்பு வச்சியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்குவோம் என்றது.பெண் பட்டாம்பூச்சியும் இந்த போட்டிக்கு ஒப்புக்கொண்டது.

அடுத்த நாள் காலையில ஆண் பட்டாம்பூச்சி சீக்கிரமாக அந்த பூ இருக்கிற இடத்துக்கு சென்றது.அந்த பூ விரியும் வரை காத்துக்கிட்டு இருந்தது.

பெண் பட்டாம்பூச்சி தன் உன்மை காதலை நிரூபிக்க இரவே அந்த பூவுக்குள் அமர்ந்து இருந்திருக்கிறது.காலை விடிந்தவுடன் ஆண் பட்டாம்பூச்சியிடம் பறந்து சென்று அதன் காதலை சொல்லலாம் என்று காத்திருந்தது.

சிறிது நேரத்தில் அந்த பூ விரிய ஆரம்பித்தது .அந்த பூவை பார்த்த ஆண் பட்டாம்பூச்சி அதிர்ச்சியில் உறைந்து போனது.

இரவு முழுவதும் அந்த பூ மூடி இருந்ததால் பெண் பட்டாம்பூச்சி பூவுக்குள் இறந்து கிடந்தது.